பூச்சரம் : இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS அறிவித்தல்கள் >> >>Directory For English Bloggers Launched >> www.orchidslk.co.nr >>

கேளுங்க.. கேளுங்க.. அவிங்க ராசாவ கேளுங்க..

பூச்சரம் வாசகர்களின் கேள்விகளுக்கு அவிய்ங்க ராசாவின் பதில்கள்..
பூச்சரம் கேளுங்க.. கேளுங்க.. பகுதி பற்றிய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அத்துடன் அடுத்த கேளுங்க.. கேளுங்க.. பகுதிக்கான பதிவரையும் வாசகர்களே முன்மொழியலாம்.. உங்கள் கருத்துக்களை இட click here


பெயர்: roja

வணக்கம் அவிங்க ராசா அவர்களே…நான் உங்கள் வலைப்பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்…மிகவும் அருமை..நல்ல நகைச்சுவையோடு சிந்திக்கவும் வைக்கிறீங்க..இதோ என் கேள்விகள்…

1.உங்கள் அனுபவங்களை எப்போதும் ஒரு சிறுகதை வடிவில் எழுதிறிங்களே ஏன்?

2.அண்ணே என்ற வார்த்தையை நீங்கள் அதிகம் பயன்படுத்த காரணம்?

வாசகர்களை எளிதில் அடைவதற்கு சிறுகதை வடிவமும் ஒன்று..என்னதான் இலக்கியம் படித்தாலும், பாட்டி கதை கேட்டு வளந்தவர்கள்தானே நாமெல்லாம்.இங்கு பாட்டிக் கதை என்றால், வெளிநாட்டில் “ஹாரிபாட்டர், சின்ட்ரெல்லா கதைகள் மதுரைப்பக்கம் வந்தீங்கன்னா, டீக்கடையில இருக்குற சின்னப் பசங்களைக் கூட “அண்ணே” போட்டுதான் கூப்பிடுவோம்..இந்த வார்த்தையை உபயோகிக்கும்போது ஏதோ நம்ம ஊருக்காரயிங்களோட பேசுறமாதிரி இருக்கு..ஆனால் இந்த வார்த்தையை நான் அதிகம் உபயோகிப்பதாகவே எனக்குப் படுகிறது..இப்போதைய பதிவுகளில் அதை திருத்தி உள்ளேன்..இன்னும் திருத்திக் கொள்கிறேன்..


பெயர்: suresh
Raja,
I am very much impressed by your writing. Is there any reason why you are writing very sentiment.

சென்டிமென்ட் இல்லாம யாருண்ணே இருக்கா..அதுவும் தமிழனுக்கு ரொம்பவே இருக்கும்னே..


பெயர்: வினோத் கெளதம்

வணக்கம் அண்ணே..
கேள்வி 1 : நீங்க ஏன் எல்லாம் வாக்கியங்களுக்கு நடுவில் அதிகமாக \"அண்ணே\" என்ற வாக்கியத்தை அதிகமாக சேர்க்கிறிர்கள்..(மதுரைக்காரர் தான் அதுக்காக \"ண்ணே\" \"ண்ணே\"னு அதிகமா சொல்லுறது \"மாயி\" படத்துல வடிவேலு சொல்ற மாதிரி இருக்கிறது.

கேள்வி 2 : நீங்கள் ஏன் மற்ற பதிவர்கள் பக்கம் வருவதில்லை ( அப்புறம் அவங்க \"பிரபல பதிவர்\" என்று சொல்லி இருக்கிற வார்த்தை உண்மையாகி விடும்)


பெயர்: கலையரசன்
ண்ணே.. நீங்க நல்லா எழுதறீங்கண்ணே!
உங்க ரசிகண்ணே நானு. அனுபவ பகிர்வு உங்கள தவிர வேற யாரும் அம்புட்டு அழகா சொன்னதில்லைண்ணே!

ஆனா பாருங்ண்ணே.. நீங்க ஏண்ணே மத்தவங்களுக்கு பின்னூட்டம் போடுறதில்லண்ணே?

நீங்க நட்புக்கு மருவாத குடுக்குற ஆளுன்னு தெரியுமுண்ணே.. பித்தன், சுரேஷ் எல்லாம் சொல்லியருக்காங்கண்ணே!

நானும் நிறைய இடத்துல பாத்துட்டேண்ணே..

பதிவு போடுற நேரத்தை கொறச்சிகிட்டுணே.. கொஞ்சம் உங்கள பின்தொடரும் நண்பர்களுக்கும், பதுசா எழுதுற நல்ல பதிவர்களுக்கும் ஊக்கம் கொடுக்குறாப்புல அவங்க தளங்களுக்கும் போய் பாருங்கண்ணே!

நீங்க அங்க எல்லாம் போறதில்லன்னு சொல்லவர்லண்ணே.. பாத்துட்டு நெறையோ, கொறையோ எதாவது சொல்லிட்டு போங்கண்ணே.. அதுக்குதானேண்ணே இந்த பாழும் மனசு ஏங்குதுண்ணே.. இதையும் நாஞ்சொல்லலைண்ணே! நீங்களே ஒரு பதிவுல எழுதுனதுதாண்ணே..

ஏதாவது தப்பிருந்தா மன்னிச்சிகோங்கண்ணே!!

ஐயோ, என்னண்ணே, மன்னிப்புன்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு..உரிமையோட கேக்கலாம்னே..பார்த்தீங்களா, ரெண்டு வார்த்தை எழுதுறதுக்குள்ள ரெண்டு அண்ணே வந்துருச்சு..அது என்னவோ தெரியலை..ரொம்ப நெருக்கமானவயிங்களோடதான் “அண்ணே” போட்டு பேசுனாத்தான் ஏதோ பக்கத்துல உக்கார்ந்து பேசுறமாதிரி இருக்கு.. ஆனா, நீங்க சொன்ன மாதிரி, அடிக்கடி “அண்ணே” என்று எழுதுவதாக நானே உணர்ந்தேன்..இப்போதைய பதிவுகளில் அதை திருத்தியிருக்கிறேன். எதிர்காலத்திலும் திருத்திக் கொள்கிறேன். அப்புறம் யாருக்கும் கமெண்ட் போடுவதில்லை என்று எதுவும் கொள்கை இல்லைண்ணே..என்னால் முடிந்த அளவுக்கு பின்னூட்டம் போடுகிறேன்னே..ஆனாலும் நண்பர்களுக்கு அதிக அளவுக்கு பின்னூட்டம் போட முடியவில்லை என்று வருத்தம் உண்டுண்ணே..கண்டிப்பாக திருத்திக் கொள்கிறேன். வலைச்சரத்தில் ஒரு வாரத்திற்கு என்னை ஆசிரியராக நியமிக்க போகிறார்கள். அதில் நிறைய புது பதிவர்களை அறிமுகம் செய்து பரிகாரம் செய்யப் போகிறேன்.


பெயர்: சரவணன்
உங்கள் எழுத்துக்கள் எல்லாம் சொந்த அனுபவமா? சித்தரிப்புகளா?

சொந்த அனுபவங்களுடன் கூடிய சித்தரிப்புகள். சொந்த அனுபவங்களை அப்படியே எழுதினால் படிக்க பிடிக்காது. மற்றும் ஏதோ நம் சுயசரிதை எழுதுவது போல் இருக்கும். அதை சுவையாக்கவே சில சித்தரிப்புகள். தயிர் சாதத்திற்கு ஊறுகாய் தொடுவதில்லையா..அது போல.


பெயர்: ரகீப்
மனைவிதான் எல்லாம் என்ற அளவுக்கு எழுதிறீங்க. ஆனா அவ ரசனைகளை உ-ம் டிவி சீரியல், நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் கிண்டல் பண்றீங்க.. நீங்கள் ஒரு வித்தியாசமான ஆணாதிக்கவாதி என்று கருதலாமா?

ஆத்தாடி..என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க…யாரண்ணே அதிகம் கிண்டல் பண்ண முடியும்…நம்மகூட உசிரா பழகுறவயிங்களத்தானன்னே..வேற யாரயையாவது கிண்டல் பண்ணி அவுங்க மனசு கஷ்டப்படுத்துறது பாவம்னே..மற்றும், என் மனைவிக்கு நான் கிண்டல் பண்ணுவதை பற்றி வருத்தம் இல்லைண்ணே..சந்தோசம்தான்..மற்றும் சமூகத்தில் நடப்பதை என் மனைவியுடன் கற்பனை கலந்துதான் எழுதுறேன்னே..


பெயர்: என்ன கொடும சார்
எதை எழுதுவது என்று தீர்மானித்தலில் உங்கள் quality assurance standards எவை?

யப்பே..என்ன இப்படி கேட்டுப்புட்டீங்க…சிக்ஸ் சிக்மா இல்லாம எழுதவே ஆரம்பிக்கிறதில்லயில்ல….ஹி..ஹி..சும்மாண்ணே..ஒரே ஒரு ஸ்டாண்டர்டுதான்னே..என் எழுத்து, குடும்பத்தோடு படிக்கிறமாதிரி இருக்கனும்..துளியும் ஆபாசம் இருக்க கூடாது..”பலான படம்”, “18+ வயதிற்கு மட்டும்” பதிவுகளைப் படித்துப்பாருங்க..உங்களுக்கே புரியும்..


பெயர்: சப்ராஸ்
வலைப்பூ ஆரம்பிக்கணும் என்று முடிவெடுத்ததற்கான முக்கிய காரணம் என்ன?

நிறைய பத்திரிக்கைகள் படித்து நம்மளும் அதுமாதிரி எழுதனும்னு ஆசையை இப்படித்தான் தீர்த்துக்குறேன்னே..


பெயர்: யோகன்
எப்ப பார்த்தாலும் சாருவையே கலாய்க்கிறீங்களே.. அது ஏன்?

ஆமாண்ணே..அவர் போன முறை எங்கிட்ட 100 ரூபா வாங்கிட்டு எஸ்கேப் ஆயிட்டாரு..அதான்..சும்மாண்ணே..அவர் எழுத்தைப் படிக்கும்போது சிலநேரம் ஆத்திரம் வரும்..ஏதோ தாந்தான் பெரிய எழுத்தாளர்..எல்லாரும் அதை ஒத்துக்கனும்மு அவர் மனசுல படுற மாதிரி எழுத்து இருக்கு..அதுதான் இப்படி கலாக்கியிறது..ஆனால் அது கண்டிப்பா தப்புண்ணே..அவர் எழுத்து அவருக்கு..என்னோட பதிவு எனக்கு..இப்போதெல்லாம் யாரையும் கலாயிக்கிறது இல்லண்ணே..நீங்க சாரு எழுத்தைப் படித்திரிக்கிறீர்களா??


பெயர்: ரவிகுலன்
இலங்கை வலைப்பூ எழுத்தாளர்களை வாசிப்பது உண்டா?

இப்ப தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்..லோஷன், யோவாய்ஸ் எழுத்துகளை படிக்கிறேன்.


பெயர்: சீலன்
புதிய வலைப்பதிவர்களுக்கான ஆலோசனை என்ன?

ஆலோசனை சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை..ஒன்றே ஒன்று சொல்லலாம் நட்புடன்..”ஆபாசம் இல்லாமல், எழுதுங்கள்..அது போதும்..”


பெயர்: ருஷ்த்தி
வலைப்பதிவிற்கு முன்னரான எழுத்தார்வம், சாதனைகள் என்ன?

முருகன் இட்லிக் கடையில் தோசைக்கு சட்னி வைக்காமல் சாப்பிட்டது என் சாதனை..கோவிச்சுக்காதீங்கண்ணே..நான் சின்னப் பையன்னே..எனக்கு சாதனை என்பதெல்லாம் பெரிய வார்த்தை..சில நேரம் கல்லூரிப் பத்திரிக்கைகளி எழுதியிருக்கிறேன்..அவ்வளவுதான்..


பெயர்: மோகன்
உங்களை பாதித்த எழுத்தாளர்கள் யார்?

என்னதான் திட்டினாலும் “சாரு” வைப் புறக்கணிக்க முடியவில்லை..ஞானி மற்றும் பாமரன்.


பெயர்: கபூர்
நீங்க எழுத வரலைன்னா என்ன பண்ணியுருப்பீங்க..
நீங்க தயார் பண்னின கேள்விக்கு எப்படி பதில் சொல்றீங்க என்டு பாக்கத்தான். ஹி.. ஹீ

ஹி..ஹி..ஆக்சுவலி நான் எழுத வரலைன்னா ஒரு பைலட்டாகவோ, டாக்டராகவோ..என்று ஓட்டை ஆங்கிலத்தில் சொல்லத்தான் ஆசை..ஆனா, ஓவராப் போயிடும்கிறதால “எழுத வரலைன்னா, வேற ஒரு பேனா வாங்கி எழுதியுருப்பேன்..”..ஆ/ அண்ணே…பேசும்போது அடிக்க கூடாது..பேச்சு பேச்சாயிருக்கனும்..சொல்லிப்புட்டேன்..)))


பெயர்: பசில்
உங்கள் எழுத்தின் இலட்சியம்...

எல்லாத்தையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கனும்..அவ்வளவுதான்..


பெயர்:
சினிமாவில் கால்பதிக்கும் எண்ணம் உண்டா?

நீங்கள் படம் எடுத்து ரிஸ்க் எடுக்கத் தயாரானால்


பெயர்: பெரோஸ்
இதுவரையில் எழுதியதன்மூலம் சாத்தித்தது அல்லது அடைவு?

உங்கள் போன்ற நல்ல நண்பர்களை அடைந்தது,.,சாதித்தது ஒன்றுமில்லை..


பெயர்: குமார்
முதலில் என்னுடைய வாழ்த்துக்கள் ராஜா . நன்றாக எழுதுறீங்க. சுவாரசியமாகவும் உள்ளது. சில பதிவுகள் நெஞ்சை நெகிழ வைக்கின்றன.

1. உங்களை பாதிக்கும் விஷயங்கள் ?

2. ஒரு பதிவராக நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன ?

3. வலைப்பூக்கள் பதிவர்களின் எழுதும் ஆர்வத்துக்கு வடிகாலாக மட்டும் இருக்கிறதா அல்லது படிப்பவர்களின் சிந்தனையை தூண்டி பயன் உள்ளதாக இருக்கின்றனவா ?

என்னைப் பாதித்தது ஈழத்தமிழர்கள் படும்பாடு..அதுவும் கண்ணைக் கட்டி பின்னால் இருந்த சுட்ட அந்த வீடியோ..

சாதிக்க விரும்புவது உங்கள் போன்றவர்களின் மனதை(யாருண்ணே..அங்க ஊமைச்சிரிப்பு சிரிக்கிறது). வலைப்பூக்கள் எழுதும் ஆர்வத்திற்கு தீனியும் போடுகிறது..சிந்தனைகளாய்யும் தூண்டுகிறது..


















.
















.









HOME

  © பூச்சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS Poosaram www.poosaram.tk 2010

Back to TOP