பூச்சரம் பற்றி
பூச்சரம் ஒரு வலைப்பதிவு திரட்டியாகும். இது முழுக்க முழுக்க இலங்கையை சேர்ந்த எழுத்தாளர்களின் வலைப்பதிவுகளை கொண்டது. இதன்மூலம் இலங்கை மக்களிடையே வலைப்பதிவிடலை பிரபலப்படுத்தல். இலக்காகும்
பூச்சரத்தின் அவசியம்
இன்று பல வலைப்பதிவு திரட்டிகள் இருந்தபோதும் அவற்றினூடாக இலங்கை சார் பன்முக விடயதானங்களில் தங்கள் கருத்துக்களை எழுதி பிரபல்யப்படுத்த முடியாதுள்ளது.
இதன் காரணமாக இலங்கை பதிவர்கள் தமிழ் நாடு சார்ந்த விடய தானங்களை, தமிழ் நாட்டு மொழி வழக்கில், எழுத்து நடையில் எழுத முனைகிறார்கள். இதன் காரணமாக இலங்கை தமிழ் நடையின் தனித்துவம் நாளடைவில் இல்லாமல் போகலாம்.
ஏற்கெனவே இணையத்தில் இருக்கும் இலங்கை வலைப்பதிவு திரட்டிகள் புதிய வலைப்பதிவர்களை சேர்க்கும் நிலையில் இல்லை. அல்லது தங்கள் வலைப்பதிவு திரட்டியில் இணைந்து கொள்ள எழுத்தாளர் பற்றிய முழு விபரமும் சமர்ப்பிக்க வேண்டியதாகிறது. இது கருத்து சுதந்திரத்தின் மீது மறைமுக அழுத்தங்களை பிரயோகிக்கிறது.
வலைப்பதிவு திரட்டிகளில் ஒவ்வொரு வலைப்பதிவையும் தனித்தனியாக சமர்ப்பிக்க நேரிடுவதால் நேரவிரயம்.
இவ்வாறான பிரச்சினைகளை தவிர்த்து அவற்றிற்கு புது தீர்வாக அமைவதே பூச்சரம்.
பூச்சரம் எந்த வலைப்பதிவு திரட்டிக்கும் எதிரானது அல்ல. அது சகல வலைப்பதிவு திரட்டிகளுக்கும் சமாந்தரமாக செயற்படும். வளரும்.
பூச்சரத்தில் சேர்வது எப்படி?
பூச்சரத்தில் சேர விசேட படிவம் ஒன்று உள்ளது. அதனூடாக உங்கள் வலைப்பூவின் URLஐ சமர்ப்பிப்பதன் மூலம் இலகுவாக பூச்சரத்தில் சேர முடியும்.
நிபந்தனைகள்
இலங்கை பதிவர் என்று வலப்பூவில் குறிப்பிட பட்டிருக்க வேண்டும்.(உதாரணம் : என்னை பற்றி)
வியாபார நிறுவனங்களின் வலைப்பூவாக இருக்க கூடாது.
ஒழுக்க கேடான அல்லது சட்ட விரோத விடயதானங்களை கொண்டதாக இருக்கக்கூடாது.
வலைப்பதிவுகள் அனைத்தும் மீளாய்வுக்கு பின்பே பூச்சரத்தில் இணைக்கப்படும். எந்தவொரு வலைப்பதிவை இணைக்காதிருக்கவோ அல்லது இடை நடுவில் நீக்கவே பூச்சரம் அதிகாரம் படைத்தது.