கேளுங்க.. கேளுங்க.. "அவிய்ங்க" கிட்ட கேளுங்க..
பூச்சரம், தமிழ் பேசும் மக்களிடையே பதிவுத்துறையை பிரபலமாக்கும் நோக்கில் செயற்படும் திரட்டியாகும்.
இந்த நோக்கத்தின் ஒரு பகுதியாக பிரபல பதிவர்களை பேட்டிகாணும் வாய்ப்பை அது கேளுங்க.. கேளுங்க.. என்ற பகுதியூடாக வழங்கவிருக்கிறது.
இத்தொடரின் மூலம் பதிவர்களிடையே கருத்துப்பரிமாறலையும், அனுபவ பகிர்வுகளையும் ஏற்படுத்துவதன் மூலம் ஆரோக்கியமுள்ள பதிவர் சமூகத்தை பூச்சரம் கட்டியெழுப்பமுடியும் என பூச்சரம் நம்புகிறது.
இத்தொடர் பூச்சரத்தின் அங்கத்தவர்கட்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் முழு தமிழ் வாசகர்கட்குமானதாகும்.
கேள்விகள் அனைத்தும் பூச்சரத்தால் சேகரிக்கப்பட்டு பரிசீலனைக்குப்பின் பதிலுக்காக குறிப்பிட்ட பதிவருக்கு அனுப்பப்படும். (தனிப்பட்ட தாக்குதல்களை கொண்ட, அநாகரீகமான கேள்விகள் மாத்திரம் பூச்சரத்தால் நீக்கப்படும்). பதில்கள் பூச்சரத்துக்கு கிடைக்கப்பெற்றபின் அவை பூச்சரத்தில் பிரசுரிக்கப்படும்.
இத்தொடரின் முதல் அங்கத்தில் பதிவாளர் கலந்து கொள்வார்.
கேள்விகளை சமர்ப்பிக்க
பதிவாளர் "அவிய்ங்க" ராஜாவின் வலைப்பூ பற்றிய சில தகவல்கள் இரத்தின சுருக்கமாக
மெல்லிய மனித உணர்வுகளை நகைச்சுவை கலந்த நடையில் தருபவர். பதிவுலகில் தன் பிரத்தியேக நடை மூலம் தனித்து மிளிர்பவர்.
முதல் பதிவு பிரசுரமான திகதி : 31 மார்ச் 2009
இதுவரை பிரசுரிக்கப்பட்ட பதிவுகளின் எண்ணிக்கை : 46
இதுவரையான ஹிட்ஸ் : 30,300
சராசரி : 658 ஹிட்ஸ் / பதிவு
"அவிய்ங்க"ளின் "பூச்சரம் கேளுங்க.. கேளுங்க.. "பற்றிய பதிவு
பூச்சரம் கேள்வி பதில்களில் நான்
பூச்சரம்னு ஒரு திரட்டி இருக்குதுண்ணே..அங்க புதுசா ஒரு பகுதி ஆரம்பிச்சிருக்காயிங்கண்ணே..பிரபல பதிவர்களிடம் விரும்பும் கேள்வியைக் கேக்கலாம்…. மேலும் வாசிக்க
பூச்சரத்தின் இம்முயற்சி தொடர்பான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்க எமக்கு எழுதுங்கள்.
poosaramlk@gmail.com